30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தற்போது பரோலில் இருக்கிறார்.
விடுதலை செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனு விசாரணையின் போது, பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார்.
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், அதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மாதம்தோறும் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Comments