தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ .1 லட்சம் அபராதம்.! சிலம்பரசன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

0 4890

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிலம்பரசன் தாக்கல் செய்த வழக்கில், எழுத்துப்பூர்வமான வாதங்களை சுமார் 3 ஆண்டுகளாக தாக்கல் செய்ய தாமதித்ததால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016-ஆம் ஆண்டில் வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் தனுக்கு பேசப்பட்ட சம்பளத்தின் பாக்கியை தயாரிப்பாளர் மைகேல் ராயப்பனிடம் இருந்து வசூல் செய்துத்தர கோரி சிலம்பரசன் தரப்பும், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிலம்பரசனிடம்  வசூலித்து தரக் கோரி மைக்கேல் ராயப்பன் தரப்பும்  தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலம்பரசன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்க தலைவராக உள்ள நடிகர் விஷால் உள்ளிட்டோரை எதிர்மனுதாரராக சிலம்பரசன் சேர்த்திருந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments