சருகுவலையபட்டி கிராமத்தில் உற்சாகத்துடன் நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகுவலையபட்டி கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் முன்னெடுக்கப்பட்டது.
சருகுவலயபட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பூத கருப்பு கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான கம்பளியான் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
இதில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன் பிடித்தனர். கட்லா, ரோகு, சிலேபி உள்ளிட்ட ஏராளமான மீன் வகைகள் பிடிக்கப்பட்ட நிலையில், அவற்றை சமைத்து இறைவனுக்குப் படைத்துவிட்டு பொதுமக்கள் சாப்பிட்டனர்.
Comments