கன்னியாகுமரி மீனவர்கள் 8 பேர் இந்தோனேசிய கடற்படையினரால் கைது

0 1904

அந்தமான் பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்தோனேசிய கடற்படை கைது செய்துள்ளது.

தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிஜின், பிரவீன், லிபின், டோமன் உள்ளிட்ட 8 மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித்து வந்த நிலையில், நேற்று இவர்கள் அந்தமான் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

அங்கு சென்ற இந்தோனேசிய கடற்படையினர் மீனவர்களின் படகை சுற்றிவளைத்து 8 மீனவர்களை கைது செய்ததோடு, விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மீனவர்கள் 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments