நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி சரிந்து விழுந்து விபத்து... 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0 2229

தெலுங்கானாவில், நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டம் பகுதியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்த போது, சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களுள் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், சுரங்க பாதுகாப்பு மேலாளர் ஜெயராஜ், சுரங்க உதவி மேலாளர் சைதன்ய தேஜா, ஒப்பந்த தொழிலாளி ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments