இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடரும் நிலையில் இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.
இரு நாடுகளிடையே போர் தொடங்கிய நாள் முதலே இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வந்தன.
போர் தொடர்ந்து வரும் சூழலில் இன்று காலை 9.40 மணியளவில மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 53,852 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 16,121 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.
Comments