ரஷ்யா போர்நிறுத்தம்... பொதுமக்கள் வெளியேற்றம்!
உக்ரைனில் போரால் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதற்காக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கை 14வது நாளை எட்டியுள்ளது. இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற 2வது மற்றும் 3வது கட்டப் பேச்சுவார்த்தையின்போது, போர் காரணமாக பொதுமக்கள் வெளியேறும் வகையில் மனிதாபிமான வழித்தடம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, உக்ரைன் தலைநகர் Kyiv, Chernihiv, Sumy, Kharkiv and Mariupol ஆகிய 5 நகரங்களில் தற்காலிக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது. இதையடுத்து போர் நடைபெற்றுவரும் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
உக்ரைன் அப்பாவி மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து உள்ளதாக ரஷ்யாவும் மக்களை வெளியேற விடாமல் ரஷ்யா தொடர்ந்து குண்டுமழை பொழிவதாகவும் இருதரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மக்கள் மனிதாபிமான வழித்தடத்தில் நீண்ட வரிசையில் வெளியேறத் தொடங்கியதால் நகரங்கள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் வெளியேறக் காத்திருக்கின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறிவிட்டதாகவும், அண்டை நாடுகளில் அவர்கள் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் அகதிகளுக்கான ஐ.நா. முகமை அறிவித்துள்ளது.
Comments