எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு ஜெர்மனி அவசர வேண்டுகோள்
கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு ஜெர்மனி அவசரமான வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஜெர்மனியின் பொருளாதாரத் துறை அமைச்சர் ராபர்ட் ஹாபெக், சந்தையில் நிவாரணத்தை உருவாக்குவதற்காக உற்பத்தியை அதிகரிக்க ஓபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகளை கேட்டுக் கொண்டார். இதனால் எண்ணெய் மீதான அழுத்தத்தைக் குறைக்க பெரும் பங்களிப்பாக இருக்கும் என்றும் ஹாபெக் கூறினார்.
ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விதித்துள்ள தடையால் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 132 டாலருக்கு விற்பனையாகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் இந்த விலை 300 டாலர் வரை உயரக்கூடும் என ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தெரிவித்துள்ளார்.
Comments