ரஷ்யாவில் உள்ள கிளைகளை தற்காலிகமாக மூடப் போவதாக மெக்டொனால்ஸ் அறிவிப்பு
பிரபல உணவு நிறுவனமான மெக்டொனால்ஸ் ரஷ்யாவில் தனது உணவகங்களை தற்காலிகமாக மூட முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனித துன்பங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது. மெக்டொனால்டு நிறுவனத்தின் ரஷ்ய கிளைகளில் மட்டும் 62 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர்.
ரஷ்ய மற்றும் உக்ரைனிய ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. ரஷ்யாவில் முதலில் திறக்கப்பட்ட மேற்கத்திய நிறுவனம் மெக்டொனால்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் கடந்த 1990ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் இயங்கி வருகிறது.
Comments