உக்ரைனுக்கு எதிரான போரில் 1000 முதல் 4000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் - அமெரிக்க உளவுத்துறை
உக்ரைனுக்கு எதிரான போரில் ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ், போரில் விளாடிமிர் புடின் பின்வாங்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார்.
உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றுவது, அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கியை மாற்றுவது, தனக்குத் தேவையான கைப்பாவை அரசு அமைப்பது இவையே புதினின் திட்டம் என பர்ன்ஸ் தெரிவித்தார்.
Comments