2022 - 23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு
2022 - 23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டைப் போலவே காகிதமில்லா பட்ஜெட்டாக இம்முறை தாக்கல் செய்யப்படும் என்றும் அன்றைய தினம் அலுவல் ஆய்வு குழு கூடி எத்தனை நாள் கூட்டத்தொடர் நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், 2022 - 23ஆம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கை வரும் 24ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் அன்றைய தினம் 2021- 22 ஆம் ஆண்டின் இறுதி துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments