ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய புதிய சேவையை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி

0 3490
ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய புதிய சேவையை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி


ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய ஏதுவாக 123-பே என்ற புதிய சேவையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட்-போன் மற்றும் இணைய வசதி இல்லாமல் சாதாரண பட்டன் போன் வைத்துள்ளவர்களும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய ஏதுவாக இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்த விரும்புவோர் வங்கி கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்து, பின்னர் டெபிட் கார்ட் விவரங்களை பதிவேற்றி, பின் நம்பர் செட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பின்னர் 080 4516 3666 என்ற ஐ.வி.ஆர் எண்ணை அழைத்து, பணப் பரிவர்த்தனை சேவையை தேர்வு செய்து, நமது நண்பர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ உடனடியாக பணம் செலுத்த முடிகிறது.

மேலும், வியாபாரிகளின் எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்து பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments