சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இயக்குநர் பாலா - முத்துமலர் தம்பதி சட்டப்படி விவாகரத்து

0 6226

பிரபல இயக்குநர் பாலா மற்றும், அவரது மனைவிக்கு பரஸ்பரம் ஒருமித்த கருத்து அடிப்படையில் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இயக்கி உள்ள இயக்குநர் பாலா, கடந்த 2004ஆம் ஆண்டு முத்துமலர் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகள் உள்ளார்.

பாலா - முத்துமலர் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் என்று கூறபடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments