வரும் 27ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி - மத்திய அரசு

0 2351

வருகிற 27ஆம் தேதி முதல் வழக்கமான சர்வதேச விமான சேவைக்கு அனுமதியளிக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் சர்வதேச விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், வழக்கமான விமான போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்றி விமான சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments