எஸ்கார்ட் வாகனங்களுடன் அழைத்துவரப்பட்ட முதல்நிலை பெண் காவலர்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறை

0 3470

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை செம்மஞ்சேரியயைச் சேர்ந்த சரிதா என்ற முதல்நிலை காவலர், அவரது வீட்டில் இருந்து காவல் நிலையம் வரை காவல்துறை எஸ்கார்ட் வாகனங்கள் புடைசூழ அழைத்துவரப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சரிதா, தன் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று வீட்டில் இருந்து கிளம்பிய சரிதாவின் இரு சக்கர வாகனத்தின் முன்னும் பின்னும் 2 எஸ்கார்ட் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பியபடி காவல் நிலையம் அழைத்து வந்தன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments