இதய நோய் பாதிப்பால் உயிரிழந்த காதலி ; மனமுடைந்த காதலன் தற்கொலை

0 2712
இதய நோய் பாதிப்பால் உயிரிழந்த காதலி ; மனமுடைந்த காதலன் தற்கொலை

கள்ளக்குறிச்சியில், முகநூலில் அறிமுகமான இதய நோய் பாதித்த காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல், காதலன் எலி மருந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகைப்பட கலைஞரான மணிகண்டனுக்கு, முகநூலில் பூமிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாற, பூமிகா இதய நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்தும் மணிகண்டன் அவரை காதலித்து வந்ததாகவும் ஒருமுறை கூட பூமிகாவை நேரில் சந்தித்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

செல்போன் மூலமாகவே இவர்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், திடீரென பூமிகாவின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பலமுறை மணிகண்டன் அழைத்தும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சில தினங்களுக்கு முன் பூமிகாவின் பாட்டி போனை எடுத்து பூமிகா இதய நோய் பாதிப்பு காரணமாக இறந்துவிட்டதாக சோகத்துடன் கூறியுள்ளார்.

மனமுடைந்த மணிகண்டன் கடந்த 2ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments