பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை தடுக்க வந்த நபர் அடித்துக் கொலை

0 2677
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை தடுக்க வந்த நபர் அடித்துக் கொலை

நெல்லை மாவட்டம் பணகுடியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய நிலையில், தாக்குதலை தடுக்க வந்த நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அங்குள்ள பெட்ரோல் பங்கிற்கு மணீஷ்ராஜா என்பவர் பெட்ரோல் நிரப்ப வந்திருக்கிறார். அப்போது டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கிக் கொண்டிருப்பதால், தாமதமாகும் என பங்க் ஊழியர்கள் கூறியிருக்கின்றனர்.

அதற்கு ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட மணீஷ்ராஜா வீட்டுக்கு சென்று தனது தந்தை பாலசுப்பிரமணியத்தையும், நண்பர்கள் குமார், சிவாவையும் அழைத்து வந்து, பங்கிற்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்.

அந்த நேரம் பார்த்து பெட்ரோல் நிரப்புவதற்காக வந்த கரையடிகாலனி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வம் என்பவர் சண்டையை விலக்க முயற்சித்திருக்கிறார்.

அப்போது, மணீஷ்ராஜாவின் தந்தை பாலசுப்பிரமணியன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துவிடவே, அதற்கு கலைச்செல்வம் தான் காரணம் எனக் கூறி மூன்று பேரும் சேர்ந்து கலைச்செல்வத்தை தாக்கி கிழே தள்ளியுள்ளனர்.

தலையில் பலத்த காயமடைந்த கலைச்செல்வம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் தப்பியோடிய மணீஷ்ராஜாவை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments