ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

0 2276

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 21-ந் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. இன்றைய விசாரணையில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஜெயலலிதா இறப்பதற்கு முன் அவருக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு கார்டியாடிக் அரெஸ்ட் ஏற்பட்டதாகவும், உயிர்காக்கும் சிகிச்சைகள் அனைத்தும் உரிய முறையில், தகுந்த நேரத்தில் அளிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவர் மதன்குமார் தெரிவித்தார்.

இதனிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் வருகிற 21-ஆம் தேதி ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments