கோவில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை - அசம்பாவிதங்களை தவிர்க்க, தேவிகாபுரம் கிராமத்தில் போலீசார் குவிப்பு

0 1951

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, கோவில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை நிலவி வரும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை நிலவிய நிலையில், நேற்று ஒரு தரப்பினர் போளூர் - சேத்துபட்டு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த நிலையில், பதிலுக்கு போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். மேலும், போராட்டக்காரர்களின் கல்வீச்சு தாக்குதலில் போலீசார் ஒருவரும் காயமடைந்தார்.

இந்த நிலையில், இரு தரப்பினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க, அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவில் கதவுகளை மூடி வளாகத்தில் பேரி கார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments