உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழக மாலுமி உள்ளிட்ட 79 பேர் மீட்பு..!

0 1445

உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைத் சேர்ந்த 2 மாலுமிகள் உள்ளிட்ட 79 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 22ஆம் தேதி உக்ரைனுக்கு சுமார் 5 கப்பல்களில் 74 இந்திய மாலுமிகள், மற்றும் 5 வெளிநாட்டினர் சென்ற நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பால் கடல் வழிகள் மூடப்பட்டன. இதனால் மைகோலைவ் நகருக்கு அருகே அவர்கள் சென்ற கப்பல்கள் நடுக்கடலில் நின்றன.

இதையடுத்து மாலுமிகள் தாங்கள் பணிபுரியும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திடமும், இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தூதரகம் பேருந்துகளை ஏற்பாடு செய்து, கப்பல்களில் இருந்தவர்களை 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மால்டோவா எல்லைக்கு பத்திரமாக அழைத்துச் சென்றது.

பின்னர், அவர்கள் அங்கிருந்து ருமேனியாவின் புக்காரஸ்ட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்புகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments