கோகுல்ராஜ் கொலை வழக்கு - முதலாவது குற்றவாளி யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனைகள் விதிப்பு..!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு நாமக்கல் அருகே ரயில் தண்டவாள பகுதியொன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரத்தை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் இன்று அறிவித்தார்.
அதன்படி, முதலாவது குற்றவாளி யுவராஜிற்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அருண், குமார், சதீஷ், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகிய 6 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதேபோல், சந்திரசேகருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தாண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
Comments