பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1175
பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,831 இரண்டாம் நிலை காவலர்கள், 1,200 தீயணைப்பு காவலர்கள் உள்ளிட்டோருக்கும், வேளாண் துறையிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதேபோல, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையிலுள்ள 47 காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப் பட்டவர்களுக்கும் முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments