அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அடங்கிய குழு அமைப்பு

0 5829
அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் அடங்கிய குழு அமைப்பு

25ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பேராசிரியர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தேசிய கணிதம் மற்றும் அறிவியல் தினத்தை ஒட்டி லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பேசிய அவர், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

தேசியக் கல்வி கொள்கைக்கு பதில் மாநில கல்வி கொள்கையை உருவாக்கவும் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments