அதிமுக அலுவலகத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாட்டம்

0 3697

உலக மகளிர் தினத்தை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி ஆட்டம், பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இ.பி.எசும், ஓ.பி.எசும். இணைந்து ஜெயலலிதா படம் பொறித்த கேக்கை வெட்டி, மகளிரணி நிர்வாகிகளுக்கு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முன்னதாக இருவரும் அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, மகளிரணியினருக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, சிறுவர்கள் சிலம்பம் சுற்றியும், சுருள் வாள் சுற்றியும் சாகசம் செய்தனர்.

பறை இசை மற்றும் செண்டை மேளக் குழுவினரின் இசைக்கு ஏற்ப மகளிரணியினர் தனித்தனியாகவும், குழுவாகவும் உற்சாக மிகுதியால் ஆட்டம் போட்டனர்.

இதனிடையே, அதிமுக பொதுக் குழுவை கூட்டுவது தொடர்பாக இ.பி.எசும், ஓ.பி.எசும் ஆலோசனை நடத்தினர். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற ஆலோசனையில் கே.பி.முனுசாமி, எஸ்.பிவேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments