கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அளக்கும் பணிகள் தீவிரம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கு சொந்தமான சுமார் 31 ஆயிரத்து 670 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கல் ஊன்றி கம்பிவேலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோயில் நிலங்களை கண்டறிவதுடன் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து நிலங்களை பாதுக்காத்து கோயிலுக்கு வருவாய் ஈட்ட ஏதுவாக நவீன ரோவர் உபகரணங்களை பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் HRCE என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் ஊன்றி கம்பிவேலி அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மீதமுள்ள நிலங்களை 150 நில அளவையர்கள் மூலம் 56 ரோவர் கருவிகளைக் கொண்டு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments