நகைக்கடன் தள்ளுபடி பெற தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களை தணிக்கை செய்ய அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு.!
நகைக்கடன் தள்ளுபடி பெற தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களை தணிக்கை செய்ய அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில் 5சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு தகுதியான பயனாளிகளை கண்டறிய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தள்ளுபடி சலுகை பெற தகுதியானவர்களின் விபரங்களை சிறப்பு தணிக்கை செய்ய, மண்டல, மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சிறப்பு தணிக்கையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுறவு சங்கங்களிலும் அயல் மாவட்ட தணிக்கையாளர்கள் மூலம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நகர கூட்டுறவு, மாவட்ட கூட்டுறவு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments