இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அதி உயர் எச்சரிக்கை.!

0 2508

இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பதற்றங்கள் அதிகரிக்கும் போது, சைபர் தாக்குதல்களுக்கான அச்சுறுத்தலும் அதிகரிப்பதாக நியூயார்க் நகர காவல் துணை ஆணையர் ஜான் மில்லர் குறிப்பிட்டார்.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முடிவானது, சைபர் தாக்குதல்களை மேற்கொள்ளும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால்தான் உயர் எச்சரிக்கையில் இருந்து அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜான் மில்லர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments