கச்சா எண்ணெய்க்குத் தடை விதிக்க முயற்சிப்பதா? கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டும் - ரஷ்யா எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து பெறும் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டாலர் வரை விலையுயரும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால், சர்வதேச சந்தையில் அதன் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும் என துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தெரிவித்தார்.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 300 டாலருக்கும் மேலாக விலை உயரும் என்ற அலெக்சாண்டர் நோவக், அதனால் ஐரோப்பிய சந்தையில் ஏற்படும் தாக்கம் ஒரு வருடத்திற்கு இருக்கும் என்றும் அதை ஐரோப்பிய நாடுகளால் ஈடுகட்ட முடியது என தெரிவித்தார்.
Comments