உக்ரைன் துணை இராணுவப்படையில் இணைந்த தமிழக மாணவர்
உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேறி வரும் சூழலில், அங்கு பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவர் அந்நாட்டின் துணை இராணுவப்படையில் இணைந்துள்ளார்.
சுப்பிரமணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - ஜான்சி லட்சுமி தம்பதியின் மகன் சாய் நிகேஷ், உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் ஏரோநேட்டிக்கல் துறையில் படித்து வருகிறார்.
சிறு வயது முதலே இந்திய ராணுவத்தில் சேர வேண்டுமென விரும்பிய சாய் நிகேஷ் அதற்காக விண்ணப்பித்ததாகவும், உயரம் குறைவாக இருந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்குள்ள துணை இராணுவ படையில் சாய்நிகேஷ் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவர் ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை இராணுவப்படையில் இணைந்துள்ளது இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments