கடும் யுத்தத்தால் தடைபட்டு நிற்கும் இந்தியர்களை வெளியேற்றும் கடைசி நடவடிக்கை.!

0 1524

உக்ரைனில் இந்தியர்களை வெளியேற்றும் கடைசி நடவடிக்கை கடும் யுத்தத்தால் தடைபட்டு நிற்கிறது.

துப்பாக்கிகள் , பீரங்கிகள், குண்டுகள் ஓசை ஓயாத நிலையில் சுமார் 700 மாணவர்கள் பதுங்குக்குழிகளிலும் தங்கள் இருண்ட அறைகளிலும் உணவு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அடைபட்டுக் கிடக்கின்றனர்.

போர் நிறுத்தப்பட்டால் உடனடியாக வெளியேற தயாராக இருக்கும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை எல்லை வரை அழைத்துச் செல்ல பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்திய அதிகாரிகள் குழு மாணவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. பிரதமர் மோடி தமது ஆலோசனைக் கூட்டத்தில் 700 மாணவர்களை மீட்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments