உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து வெளியேறுகிறது ஆப்பிள்.!
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் வெளியேறுவதால், அந்நிறுவனத்திற்கு தினசரி 3 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது.
லிதுவேனியாவை தளமாகக் கொண்ட ஆன்லைன் ஷாப்பிங் தளமான பர்காவின் மதிப்பீட்டின்படி, ரஷ்ய ஸ்மார்ட்போன் விற்பனையில் 15 சதவீதத்தை பிடித்து ஆப்பிள் நிறுவனம் 3வது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதால் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயில் தினசரி 3 மில்லியன் டாலர் அல்லது ஆண்டுதோறும் ஒன்று புள்ளி 14 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என பர்காவின் மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
Comments