சர்வதேச ஜூடோ கூட்டமைப்பில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புதின் நீக்கம்.!
சர்வதேச ஜூடோ கூட்டமைப்பில் ரஷ்ய அதிபர் புதின் வகித்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கப்படுவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கவுரவ தலைவர் மற்றும் தூதர் பதவிகளில் இருந்து புதின் விலக்கப்படுவதாக அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில் அதிபர் புதின் மற்றும் ரஷ்ய தொழிலதிபர் Arkady Rotenberg ஆகியோர் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பில் வகித்த அனைத்து பொறுப்புகளில் இருந்து விலக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே டேக்வாண்டோ மற்றும் ஜுடோகா விளையாட்டு அமைப்புகளும் அதிபர் புதினுக்கு வழங்கிய கவுரவ பட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.
Comments