ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியில் 400 பொதுமக்கள் கொலை - ஐ.நா சபை
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கிட்டத்தட்ட 400 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐநா மனித உரிமைகள் பேரவையில் பேசிய மிச்செல் பச்லெட் ஐஎஸ்ஐஎஸ் கே அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 50க்கும் மேற்பட்டவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட பச்லெட், பெண்கள் பொது வாழ்வில் முழுமையாக பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Comments