உக்ரைனில் பேக்கரி தொழிற்சாலை மீது வான்வழி தாக்குதல் - 13 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் பேக்கரி தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கீவ் நகரில் ரஷ்ய ராணுவத்தினரின் குண்டுவீச்சு தாக்குதலின் போது சுமார் 30 பேர் பேக்கரி பகுதியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் இதுவரை உக்ரைனில் ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Comments