நானும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என்று மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் பேசும் வீடியோ வைரல்

0 2845
நானும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என்று மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் பேசும் வீடியோ வைரல்

நாகை ஆயுதப்படை மைதானத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான எறி பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை துவங்கி வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்பு ராஜ் வந்திருந்தார். அங்கு வரிசையில் நின்று இருந்த பெண்களிடம் வணக்கம் தெரிவித்து வந்து கொண்டிருந்த மாவட்ட ஆட்சி தலைவரிடம், வரிசையில் நின்று இருந்த ஒரு சிறுவனும் அவருக்கு வணக்கம் தெரிவித்தான்.

பின்னர் மாவட்ட ஆட்சி தலைவரிடம் பேசிய சிறுவன், நான் கவின்மாறன் ஐ.ஏ.எஸ் என்றும், நானும் உங்களை போல ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என்றும் தனது கொஞ்சும் தமிழில் பேசினான்.

இதனை கேட்ட மாவட்ட ஆட்சி தலைவர், அங்கு நின்றிருந்த அதிகாரிகள் மற்றும் பெண்களும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட ஆட்சி தலைவரிடம் நேரடியாக பேசிய சிறுவனின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments