போர் எதிரொலியால் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த ராணுவ தம்பதியர்
உக்ரைனில் ராணுவத்தில் பணியாற்றி வரும் தம்பதியர்கள் 20 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் போர் எதிரொலியாக திடீரென திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, கீவ் நகருக்குள் நுழையும் பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
உக்ரைன் பிராந்திய பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் கீவ் நகரை சேர்ந்த லெசியா இவாஷென்கோ மற்றும் வலேரி ஃபிலிமோனோவ் ஆகிய இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அது வரையில் திருமணம் செய்து கொள்ளும் திட்டமே இல்லாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் போருக்கு மத்தியில் திருமணம் செய்து கொள்ள திடீர் முடிவெடுத்து கீவ் நகரின் நுழைவுப்பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் சக ராணுவ வீரர்களுக்கு மத்தியில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
வழக்கமான திருமண ஆடைகளை அணிந்து கொள்ளாமல் ராணுவ உடையிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ஸ்கோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
Comments