5 மாநிலங்களில் ஆட்சி அமைப்பது எந்த கட்சி ?... கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு

0 8930

த்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று நியூஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

70 தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக ETG RESEARCH மற்றும் இந்தியா நியூஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைப்பதில் பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையே இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments