உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விவகாரம் - சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை
தங்கள் நாட்டில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றக்கோரி உக்ரைன் தாக்கல் செய்த மனு தொடர்பாக ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டினரும் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்ய படைகளை வெளியேற உத்தரவிடக் கோரியும், போர் நிறுத்தத்தை அறிவிக்கக்கோரியும் நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை தொடங்கிய போது, நாகரிகமான நாடுகளைப்போல் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வோம் என்றும் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும் ரஷ்யாவிற்கு உக்ரைன் வலியுறுத்தியது.
புதின் உண்மைக்கு மாறான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், சர்வதேச சட்டங்களை ரஷ்யா அவமதித்ததாகவும் உக்ரைன் தரப்பு தெரிவித்தது. சர்வதேச நீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் பங்கேற்கப்போவதில்லை என ரஷ்யா ஏற்கனவே அறிவித்தது.
Comments