இரவு நேரத்தில் வானில் பரவலாக தென்பட்ட வடதுருவ ஒளி

0 2544

டக்கு சுவீடனில் இரவு நேரத்தில் வானில் பரவலாக தென்பட்ட ஆரோரா எனப்படும் துருவ ஒளி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அந்நாட்டு நேரப்படி இரவு 7.30 மணியளவில் அந்த ஒளி பச்சை, டார்க் பின்க், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் தென்பட்டது.

நள்ளிரவுக்கு முன்பாக 4 முறை துருவ ஒளி தென்பட்ட நிலையில் அவற்றுள் பச்சை நிற ஒளி மட்டும் அதிகபட்சமாக 1 மணி நேரம் நீடித்ததாக உள்ளூர் புகைப்பட கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

துருவ ஒளி மிக வேகமாக அசைந்ததாகவும், அனைத்து திசைகளில் இருந்தும் அந்த ஒளியை காணமுடிந்ததாகவும் கூறிய அந்த புகைப்பட கலைஞர், தன் வாழ்நாளில் தான் கண்ட சிறப்பான காட்சி அது தான் எனவும் கூறி சிலாகித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments