டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரே நாளில் 88 காசுகள் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லா வகையில் 77 ரூபாய் 24 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், அதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தது ஆகியவற்றால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 130 டாலரை நெருங்கியுள்ளது.
இதனால் எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா அதிகத் தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்றைய வணிக நேர முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77 ரூபாய் 24 காசுகளாக இருந்தது. இன்று ஒரேநாளில் ரூபாய் மதிப்பு 88 காசுகள் சரிந்துள்ளது.
Comments