உக்ரைனுக்கு எதிராக போரிட சிரிய நாட்டைச் சேர்ந்த வீரர்களை ரஷ்யா நியமித்து வருவதாக தகவல்
உக்ரைனுக்கு எதிராக போரிட சிரிய நாட்டைச் சேர்ந்த வீரர்களை ரஷ்யா நியமித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.
இந்நிலையில், நகர்ப்புறங்களில் நடக்கும் போரில் சண்டையிடும் திறன்பெற்ற சிரிய நாட்டை சேர்ந்தவர்களை ரஷ்யா நியமித்து வருவதாக அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில சிரிய வீரர்கள் ஏற்கனவே ரஷ்யாவிற்குச் சென்றுவிட்டதாகவும் அவர்கள் மிக விரைவில் உக்ரைனுக்குள் அனுப்பப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டிற்குள் சென்று சண்டையிடும் வீரர்களுக்கு ரஷ்யா 200 முதல் 300 டாலர்கள் வரை வழங்குதாகவும் சிரிய நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments