சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 139 டாலராக அதிகரிப்பு

0 2350
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 139 டாலராக அதிகரிப்பு

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் தடை விதிக்க திட்டமிடுவதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 139 டாலராக அதிகரித்துள்ளது.

2008ஆம் ஆண்டிற்கு பிறகு கச்சா எண்ணெய் விலை இந்த உச்சத்தை தொடுவது இதுவே முதன் முறையாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அளித்த பேட்டியில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை தடை செய்வதற்கான வாய்ப்பு குறித்து ஐரோப்பிய மற்றும் நட்பு நாடுகளுடன் பேசி வருவதாக குறிப்பிட்டார்.

அதே சமயத்தில், சர்வதேச சந்தையில் போதுமான எண்ணெய் விநியோகம் இருப்பதையும் உறுதி செய்யப்படும் என அவர் கூறினார். ஆண்டனி பிளிங்கன் தெரிவித்த கருத்துக்களின் எதிரோலியாக இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments