உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் - பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம்

0 2818

க்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை இந்தியாவிலேயே தொடர உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தமிழகம் திரும்பியிருக்கும் நிலையில், இந்த மாணவர்கள் உக்ரைனுக்கு திரும்புவதும், படிப்பை மீண்டும் தொடருவதும் நடைமுறையில் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு, சிறப்பு கவனம் செலுத்தி தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்கள் இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களது படிப்பை தொடர உரிய வழிமுறைகளை கண்டறியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments