சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.808 அதிகரிப்பு

0 2245
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.808 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40ஆயிரம் ரூபாயை கடந்து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் எதிரொலியால், தங்கம் விலை அதிகரித்து வருகிறது. பங்குச்சந்தைகள் வீழ்ச்சி காரணமாக, முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் மீது திரும்பி முதலீடு அதிகரித்துள்ளதால், அதன் விலையும் அதிகரித்து வருகிறது.

காலையில் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் அதைவிட கூடுதலாக 128ரூபாய் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி கிராம் தங்கம் 101 ரூபாய் அதிகரித்து 5,071 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 808ரூபாய் அதிகரித்து 40,568 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியும் கிலோவுக்கு 2,300ரூபாய் உயர்ந்து, 75,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments