ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ; ஓய்வெடுக்க பரிந்துரைத்தும் ஜெயலலிதா மறுத்துவிட்டதாக மருத்துவர் வாக்குமூலம்

0 2853
ஓய்வெடுக்க பரிந்துரைத்தும் ஜெயலலிதா மறுத்துவிட்டதாக மருத்துவர் வாக்குமூலம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணையை துவங்கிய நிலையில், விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 5 பேர் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர்.

அவர்களிடம் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது நடந்தவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா 2ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன், அவருக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்ததாகவும், மற்றவர்கள் துணையில்லாமல் நடக்கக் கூட ஜெயலலிதா சிரமப்பட்டதாகவும் பாபு மனோகர் என்ற மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பதவியேற்புக்கு முதல் நாள் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தாகவும், சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, உடற்பயிற்சி மேற்கொள்ளவும், சிறுதாவூர் அல்லது உதகைக்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி பரிந்துரைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறி ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்துவிட்டதாகவும் அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments