இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு ; திமுக - அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு

0 1789
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால், மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், திமுக - அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ளா 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுகவும், 7 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றது. கடந்த 4-ந் தேதி மறைமுகத் தேர்தல் அன்று திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.

வாக்குப்பெட்டியை சாலையில் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டதாக, மறு அறிவிப்பு வரும்வரை தேர்தலை ஒத்திவைத்த தேர்தல் அதிகாரி, போத்தனூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது செத்துக்கு சேதாரம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments