உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மருத்துவ மாணவரை பெற்றோர் ஆரத்தழுவி வரவேற்பு

0 4138

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய ராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவரை பெற்றோர் ஆரத்தி எடுத்து ஆரத்தழுவி வரவேற்றனர்.

4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த முகமது அதீம் என்ற அந்த மாணவர் உக்ரைனில் போர் சூழலுக்கு மத்தியில் சிக்கித்தவித்து வந்தார். இந்நிலையில் தெற்கு உக்ரைனிலிருந்து ருமேனியா வழியாக பிரதமரின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு விமானத்தின் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட அவர், அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் கார் மூலம் அழகன் குளம் திரும்பிய மாணவரை பேருந்து நிலையத்தில் வைத்து ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments