உக்ரைன் போரால் மத்தியக் கிழக்கு நாடுகளில் உணவுதானிய விலை உயரும் அபாயம்
உக்ரைன் போரின் காரணமாக மத்தியக் கிழக்கு நாடுகளில் உணவுதானியம் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக அளவில் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்திலும், உக்ரைன் நான்காமிடத்திலும் உள்ளன. இந்த இருநாடுகளும் சேர்ந்து உலகக் கோதுமை ஏற்றுமதியில் 30 விழுக்காட்டையும், மக்காச்சோள ஏற்றுமதியில் 19 விழுக்காட்டையும் கொண்டுள்ளன.
உக்ரைனில் பல வாரங்களுக்குப் போர் நீடித்தால் விவசாயிகள் கோதுமை பயிரிட முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் மேலைநாடுகளின் பொருளாதாரத் தடையால் ரஷ்யா விளைவித்த தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாது.
இதனால் உக்ரைன், ரஷ்ய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் எகிப்து, லெபனான், லிபியா, துருக்கி ஆகிய நாடுகளில் தானியங்கள், பால், இறைச்சி ஆகிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.
Comments