சீனாவும் வருங்காலத்தில் தைவானை கைப்பற்ற திட்டமிட்டால் தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை ஆஸ்திரேலியா வழங்கும் - அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்

0 3882

ரஷ்யா போன்று சீனாவும் வருங்காலத்தில் தைவானை கைப்பற்ற திட்டமிட்டால் தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை ஆஸ்திரேலியா வழங்கும் என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தைவானை, சீனா ஆக்கிரமிக்கும் பட்சத்தில் இந்தியாவை போன்று ஆஸ்திரேலிய பிராந்தியங்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், சீனா  ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொண்டால் அதை தடுக்க எந்த எல்லைக்கும் ஆஸ்திரேலியா செல்வோம் என்றார். எல்லை பிரச்சினை தொடர்பாக அமைதி போக்கை கடைபிடிக்கவே ஆஸ்திரேலியா விரும்புவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments