உணவருந்த கணவன் வராததால் மனம் உடைந்த மனைவி தீக்குளிப்பு

0 3068

சென்னையை அடுத்த அம்பத்தூரில் சாப்பிட கணவன் வராததால் மனம் உடைந்த மனைவி தீக்குளித்தார்.

மங்களபுரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த தேவராஜ் -மேகலா தம்பதியினருக்கு பூர்ணிமாதேவி என்ற மகளும், நவீன்ராஜ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள்  இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மேகலா, கணவரை உணவருந்த அழைத்த போது சரிவர கணவன் பதிலளிக்காததால் மனமுடைந்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் வலி தாங்காமல் அலறிய மேகலாவை காப்பாற்ற  தேவராஜ் முயன்ற போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments